உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: என்.எல்.சி., தத்து எடுத்துக் கொள்ள முடிவு


கடலூர்: 

                  என்.எல்.சி., பகுதியில் வரும் ஊராட்சிகளில் ஏற்படும் குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் அந்த கிராமங்களை தத்து எடுத்துக் கொள்ள என்.எல்.சி., நிர்வாகம் முடிவு செய் துள்ளது.

                       என்.எல்.சி., நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் சுற்றுப்புற மேம்பாடு குறித்த திட்டப் பணிகளின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு கீழ்க்கண்டவாறு தீர்வு காணப்பட்டது. கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் பெரியாக்குறிச்சி ஊராட்சியில் அம்புராசெங்குட்டை முதல் பெரியாக்குறிச்சி வரை கூட்டுக்குடிநீர் திட் டத்தின் கீழ் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் என்.எல்.சி., மூலம் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேலும் சேப்ளாநத்தம் காமராஜ் நகர், கீழ்பாதியில் ஆழ்குழாய் கிணறு தலா 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம், விருத்தாசலம், மேல்புவனகிரி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள என். எல்.சி., பகுதியில் வரும் ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண தத்து எடுத்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் என்.எல்.சி., அதிகாரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior