புவனகிரி:
புவனகிரி அருகே வடதலைக்குளம் கிராமத்தில் குடிநீர் உவர்ப்பாக மாறி விட்டதால் குடிநீருக்கு அவதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. புவனகிரி அருகே வடதலைக்குளம் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே பொதுமக்கள் வசதிக்காக கடந்த 2006-07ம் ஆண்டு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. குளக்கரையின் கீழ்புறம் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. காலப்போக்கில் குடிநீர் முற்றிலும் உவர்ப்பாக மாறியதால் மீண்டும் குளக்கரையின் மேல்புறம் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. தற்பொழுது புதியதாக போடப்பட்ட போர் வெல்லிருந்து கிடைக்கும் குடிநீரும் உவர்ப்பாக மாறிவிட்டதால் பொதுமக்கள் நல்ல குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மீண்டும் மாற்று ஏற்பாடு செய்து நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக