சேத்தியாத்தோப்பு:
அகர ஆலம்பாடியில் கரும்பு உற்பத்தி பெருக்க விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். புவனகிரி வேளாண் உதவி இயக்குநர் கனகசபை முன்னிலை வகித்தார். உழவர் மன்ற தலைவர் வேல்முருகன் வரவேற் றார். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆட்சியர் ஆசியா மரியம் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கடலூர் வேளாண் இணை இயக்குநர் அலுவலர் சந்திரசேகரன், முன்னாள் தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) ராஜதுரை, கரும்பு அலுவலர்கள் முருகேசன், வெங்கடேசன், கரும்பு அபிவிருத்தி அலுவலர் ராஜன், புவனகிரி வேளாண்மை அலுவலர் ராஜன் ஆகியோர் கரும்பு உற்பத்தி பெருக்கம், சர்க்கரை கட்டுமான உயர்வுக் கான வழி முறைகள், கரும்பு நடவு முறைகள், சொட்டு நீர் பாசனம் குறித்து பேசினர். உதவி வேளாண் அலுவலர் கவிதா, கரும்பு உதவியாளர்கள் ராமலிங்கம், தமிழ்மணி, உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், ராமலிங் கம், குஞ்சிதபாதம், ஊராட்சி தலைவர் சங்கர், உட்பட பலர் பங்கேற்றனர்.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய