உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர் மீது தாக்குதல்

 கடலூர்:

                காவல்நிலையத்தில் ஏற்பட்ட பிரச்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரையும் தலைமைக் காவலரையும் தாக்கியதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். திட்டக்குடியை அடுத்த சிறுபாக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முகாம் அமைப்பாளர் கருப்பையா (28). அவரது மனைவி கண்ணம்மாளுக்கும் அதே ஊர் சேகரின்  மனைவி ஜெயாவுக்கும் இடையே அவர்களின் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை காரணமாக விரோதம் இருந்து வந்தது. இரு தரப்பினரும் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணைக்கு வந்திருந்த அனைவரையும் தரையில் அமருமாறு சப்-இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

                      தனது மனைவி கண்ணம்மாளையும் தரையில் அமருமாறு கூறியதால், கருப்பையாவுக்குக் கோபம் ஏற்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணனுக்கும் கருப்பையா தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றியதில் சப்-இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணனும் தலைமைக் காவலர் கலியமூர்த்தியும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் இளங்கோ விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்.  அதைத் தொடர்ந்து சிறுபாக்கம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கருப்பையா மற்றும் அவரது ஆதரவாளர் சின்னக்கண்ணு (45) ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்த வருகிறது.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior