அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்கி, செயல்படுத்து வதை கண்காணித்து வருகின்றனர். அதே போல், வனத்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைப்புக்கும் 2 ஆயிரத்து 500 ரூபாயும், ஒரு சில பள்ளிகளுக்கு ஆயிரத்து 250 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தும் விதமாக இரு அமைப்புகளும் நாளை புவி தினம்' கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஒட்டி, பள்ளிகளில் கருத்தரங்கம், கருத்து பட்டறை, மரம் நடுதல், வண்ணம் தீட்டுதல், ஓவியம் வரைதல், பேச்சுபோட்டி, வினாடி-வினா போட்டி, சூழல் கருத்துகாட்சி போட்டிகள், நடைப்பயணங்கள் நடத்துதல் போன்றவைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.