உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்

 கடலூர்:

                  பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு நிறுவன அனைத்துத் தொழிற்சங்கங்களையும் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர்.

               தொழிற்சங்கங்களுக்கும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து   வேலைநிறுத்தம் தொடங்கியதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலர் சம்பந்தம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூறியது:

              30 சதவீதம் பி.எஸ்.என்.எல். நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யக் கூடாது, ஒரு லட்சம் அலுவலர்களை, ஊழியர்களை விருப்ப ஓய்வில் வெளியேற்றும் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஐ.டி.ஏஸ். அதிகாரிகள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைவது குறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டும், காப்பர் கேபிள்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவைக் கைவிட வேண்டும், 93 லட்சம் ஜி.எஸ்.எம். இணைப்புக்கான கருவிகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐ.டி.ஏ. பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

               அகில இந்திய அளவில் நடைபெறும் இப்போராட்டத்தில்  பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் 3 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 24 ஆயிரம் பேரும், கடலூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 1,300 பேரும் பங்கேற்றனர் என்றார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை கடலூர் தொலைத்தொடர்பு பொதுமேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலைநிறுத்தம் காரணமாக கடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. தொலைபேசிக் கட்டணம் செலுத்த வந்த பலர் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். அஞ்சல் நிலையங்களில் பலர் தொலைபேசிக் கட்டணம் செலுத்தினர்.  இந்நிலையில் தொலைத் தொடர்பு அமைச்சருக்கும் தொழிற்சங்கப் பிதிநிதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.  எனவே மாலையில் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சிதம்பரம்சிதம்பரத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தெற்கு சன்னதி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கே.நாவு தலைமை வகித்தார். வி.சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார். ஏ.ஜெய்குமார், டி.விஸ்வலிங்கம், ஏ.ராஜசேகரன், ஜி.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior