பண்ருட்டி:
பண்ருட்டி கடைகளில் விற்பனை செய்யப்பட்ட போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில்களை அக் கம்பெனி ஊழியர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி நகர பகுதியில் போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில் விற்பனை செய்யப்படுவதாக காஸ்ட்ரால் கம்பெனி நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த காஸ்ட்ரால் கம்பெனியின் வணிககுறி அதிகாரி எம்.பி.வி.செழியன் தலைமையில், குழு ஒருங்கிணைப்பாளர் லெஸ்லிமார்டீன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் பண்ருட்டி பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
10 கடைகளில் சோதனை செய்ததில் 7 கடைகளில் இருந்து 100 லிட்டருக்கு மேல் போலி காஸ்ட்ரால் என்ஜின் ஆயில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பேசிய எம்.பி.வி.செழியன்:
பறிமுதல் செய்யப்பட்ட ஆயில்களை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டவுடன், காஸ்ட்ரால் பெயரில் போலி என்ஜின் ஆயில் விற்பனை செய்தவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆய்வின் போது பண்ருட்டி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக