பண்ருட்டி :
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவில் திருப்பணி செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 13.5 லட்சம் ரூபாய் செலவில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு சீரமைக் கும் பணிகள் துவங்கியது. கூடுதலாக 6 லட்சம் ரூபாய் செலவில் மடப் பள்ளி அமைக்கும் பணிகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனையொட்டி கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு புண்யாக வாசனம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாகுதியும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால பூஜை துவங்குகிறது. 15ம்தேதி காலை 8 மணிக்கு யாக சாலா புண்யாகவாசனம், மகாசாந்தி நித்யஹோமம், 2ம் கால பூர் ணாகுதி, மாலை 6 மணிக்கு திருமஞ்சனம், மூர்த்தி ஹோமம், 3ம் கால பூஜையும் நடக்கிறது. 16ம்தேதி காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 4ம் கால பூஜைகள் துவங்கி காலை 10 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக