உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

பராமரிப்பின்றி பாழாகும் 300 ஏக்கர் கேப்பர்மலை கொண்டங்கி ஏரி

 கடலூர்

                 போதிய பராமரிப்பு இல்லாததால் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கொண்டங்கி ஏரியில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கிரிக்கெட் மைதானமாக காட் சியளிக்கிறது. ஏரியை பராமரித்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், கடலூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

               கடலூர் அடுத்த கேப்பர் மலையில் 300 ஏக்கர் பரப்பளவில் 100 ஆண்டுகள் பழமையான கொண்டங்கி ஏரி அமைந்துள்ளது.  காலி இடம் வனத்துறை கட்டுப்பாட்டிலும், நீர் பிடிப்பு பகுதி மீன் வளத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.  மழைக் காலங்களில் ஏரி நிரம்பினால் அடுத்த 8 மாதங்களுக்கு தண்ணீர் வற்றாமல் இருக்கும். கொண்டங்கி ஏரி மூலம் ஆரம்ப காலத்தில் 5,000 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. தற்போது போதிய பராமரிப்பின்றி நாளுக்கு நாள் ஏரியின் ஆழமும் குறைந்து வருகிறது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக ஏரியில் 50 ஏக்கர் அள வில் காட்டாமணி செடிகள் படர்ந்துள்ளது. ஏரியின் முதல் மதகில் அமைந்துள்ள 'ஷட் டர்' பழுதடைந்து ஓட்டை விழுந்ததால் இதன் வழியாக  தண்ணீர் முற்றிலும் வடிந்து விடுகிறது. இதனால் மழைக் காலம் வந்து மூன்று மாதமே முடிந்த நிலையில் தற்போது ஏரி தண்ணீர் முழுவதும் வடிந்து விட்டது. இதனால் ஏரி வறண்ட 'கிரிக்கெட்' மைதானம் போல் காட்சியளிக்கிறது.  

அணை உடையும் அபாயம்:  

                ஏரியின் அணைப் பகுதியில் இருந்து 30 அடி தூரத்திற்கு மேல்தான் மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என விதி உள்ளது. ஆனால் 100 நாள் வேலை திட்ட பணியில் ஏரியின் அணையையொட்டி மராமத்து பணி  செய்யப்பட்டு, வெட்டி எடுக்கப்படும் மண் அணை மீது கொட்டப்படுகிறது. இதனால் ஏரியின் அணை வலுவிழந்து உடையும் அபாயம் உள்ளது. 

தூர் வாரியும் பயனில்லை: 

                ஏரியின் உள் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் மண் சுற்றியுள்ள உயரமான மலைப் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலங்களில் மலை பகுதியில் இருந்து வரும் வெள்ளத்தினால் கொட்டப் பட்ட மண் மீண்டும் ஏரிக்கு அடித்து வரப்பட்டு தூர்ந்து விடு கிறது.  ஏனோ தானோ வென்று நடக்கும் தூர் வாரும் பணியால் ஏரிக்கு எவ்வித உபயோகமும் இல்லாமல் போகிறது. மேல் ஏரி 'ஷட்டர்' உடைப்பு: கொண்டங்கி ஏரியில் மேல் ஏரி, கீழ் ஏரி என இரு பிரிவுகளாக உள்ளது. அதில் மழைக் காலங்களில் மேல் ஏரி நிரம்பி, பின்னர் அங்கிருந்து கீழ் ஏரிக்கு தண்ணீர் வரும். ஆனால் மேல் ஏரிப் பகுதியில் ஒரு சிலர் 30 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். மழைக் காலங்களில் மேல் ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் விவசாயம் செய்ய முடியாது என்பதால் அவர்கள் மேல் ஏரியில் உள்ள 'ஷட்டரை' பெயர்த்து எடுத்து விட்டதால்  தண்ணீரை தேங்கி நிற்க முடியாமல் கீழ் ஏரிக்கு வடிந்து விடுகிறது. கீழ் ஏரியில் உள்ள ஷட்டரும் பழுதடைந்துள்ளதால் தண்ணீர் வடிந்து வீணாகிறது. இதனால் 8 மாதம் தேங்கி நிற்கும் தண்ணீர் மூன்றே மாதத்திற்குள் வற்றி விடுகிறது.
 

                 நீர் மட்டம் குறையும் அபாயம்: ஏரியில் போடப்பட்டுள்ள 14 போர்வெல் மூலமே கடலூர் மற்றும் முதுநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் கேப்பர் மலை பகுதியில் 5க்கும் மேற்பட்ட 'மினரல் வாட்டர்' தயாரிக்கும் கம்பெனிகள் உள்ளதால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்கப் படுகிறது. இதனால்  இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மட்டம் குறைந்து கடலூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. நீர்மட்டம் குறைவதால் உப்பு நீரும் குடிநீரில் கலக்கும் அபாயம் உள்ளது.  

பராமரித்தால் வருவாய்: 

           கோடை காலம் என்பதால் தற்போது ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்த ஏதுவான தருணமாக உள்ளது. கடலூர் பகுதியில் பெரிய அளவில் அமைந்துள்ள ஏரியை தூர் வாரி, ஆழப் படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஏரியில் பயன்படுத்தினால் வரும் காலங்களில் கடலூர் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. இதனால் நல்ல குடிநீரும் கிடைக் கும். மேலும் ஏரியை பராமரித்தால் ஆண்டிற்கு 5 முதல் 10 லட்சம் வரை மீன் வளர்ப்பிற்கு ஏலம் போகும். ஏரியில் போதிய இடம் இருப்பதால் 100 ஏக்கர் பரப்பளவிற்கு மரம் வளர்த்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும்.            

                       ஏரியை பராமரித்து மதகுகளில் உள்ள ஷட்டர்களை சீரமைத்து அதனை பராமரிக்க ஆட்களை நியமித்தால் ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாது. மேல் ஏரியின் அணையை பலப்படுத்த வேண்டும். மேலும் கொண்டங்கி ஏரியை சுற்றுலாத் தலமாக மாற்றினால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். ஆனால் இதே நிலையில் விட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் ஏரி முழுவதும் காணாமல் போகும் சூழல் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பொது அறிவிற்கு:

உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் - ஸ்புட்னிக் 1

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior