கடலூர் :
கலப்பு திருமணம் செய்து கொண்டதால் கிராமத் தினர் இருப்பிடத்தை காலி செய்து விட்டதாக கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்தார். விருத்தாசலம் வட்டம் பாலக்கொல்லை, ஆர்.சி.சொக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விண்மலர். கணவர் அருண்குமார். இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
விண்மலர் கலெக்டரிடம் கொடுத்த மனு:
கலப்பு திருமணம் செய்து கொண்டதால் பிறந்த வீட்டிலும் ஆதரவு இல்லை. புகுந்த வீட்டிலும் இடம் இல்லை. புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வந்தோம். தற்போது அரசு புறம்போக்கு இடம் என வீட்டை காலி செய்து விட்டனர். கணவரும் கிராம மக்களுக்கு பயந்து வெளியூர் சென்று விட்டார். நான் 7 குழந்தைகளை வைத்துக் கொண்டு திண்டாடி வருகிறேன். பள்ளியில் படித்த என் மகள்கள் 4 பேரும் கிராம மக்களின் தூண்டுதல் காரணமாக பள்ளியில் இருந்து விடுவித்து விட்டனர். கடந்த 6 மாதமாக பள்ளிக்கு செல்லவில்லை. கிராமமே என்னை ஒதுக்கி வைத்துள்ளனர். எனவே கிராமத்தில் வசிக்க ஆவண செய்யுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக