புதுவை மாநிலத்தில் பதிவுசெய்து, கடலூர் மாவட்டத்தில் வாகன வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதால் கடந்த 4 தினங்களில் கடலூரில் பிடிபட்ட இரு
கடலூர்:
கடலூர், விழுப்புரம், நாகை, திருவாருர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்தோர் புதுவை மாநிலத்தில் வாகனங்களை வாங்கி, தமிழகத்தில் இயக்குவதால் தமிழக அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் வாகனங்களில் 30 சதம் வாகனங்கள், புதுவை மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை என்று, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எனினும் தற்போது இந்த எண்ணிக்கை 50 சதமாக உயர்ந்து விட்டது. இதே போல் விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் இயக்கப்படும் வாகனங்களில் 30 சதத்துக்கு மேல் புதுவை மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டவை என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மோட் டார் வாகனங்களை எந்த மாநிலத்திலும் வாங்குவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அந்த வாகனம் எந்த மாநிலத்தில் இயக்கப்படுகிறதோ அந்த மாநிலத்துக்கு வாகனவரி செலுத்த வேண்டும் என்பது விதி.
புதுவை மாநிலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், அந்த மாநிலத்தின் வாங்கும் திறனைவிட, 5 மடங்கு அதிகப்படியான வாகனங்கள் விற்பனை ஆகின்றன என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கடலூர் உள்ளிட்ட மேற்கண்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுவை மாநிலத்தில் வாகனங்களை வாங்குவதே இதற்குக் காரணம். தமிழகத்தில் வாகனங்களுக்கான விற்பனை வரி கடந்த ஆண்டு 8 சதமாக இருந்தது. ஆனால் புதுவையில் 4 சதம்தான். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வாகன விற்பனை வரி மேலும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரூ.10 லட்சத்துக்குக் கீழ் உள்ள வாகனங்களுக்கு விற்பனை வரி 10 சதமாகவும் அதற்குமேல் மதிப்புள்ள வாகனங்களுக்கு விற்பனை வரி, 15 சதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட 5 மாவட்டங்கள் மட்டுமல்ல மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்தோர் வாகனங்களை வாங்க புதுவை மாநிலத்துக்கு விரைந்தோடும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.சாலை வரி
மேலும் சாலைவரி தமிழகத்தில் வாகன மதிப்பில் 8 சதம். ஆனால் புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.900 தான். 4 சக்கர வாகனங்களுக்கு புதுவை மாநிலத்தை விட, தமிழகத்தில் ஒரு வாகனத்துக்கு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும். இந்த மிகப்பெரிய வித்தியாசம் காரணமாகவே தமிழகத்தைச் சேர்ந்த பலர் புதுவை மாநிலத்துக்குச் செல்கிறார்கள். ÷தமிழகத்தைச் சேர்ந்த பலர், புதுவை மாநிலத்தில் போலியான முகவரி அளித்து வாகனங்களை வாங்குகிறார்கள். புதுவை மாநில வாகன டீலர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அந்த வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படும்போது, போலீஸ் மற்றும் போக்குவரத்து அலுவலர்களிடம் சிக்கினால், நான் புதுவையைச் சேர்ந்தவன், முக்கிய வேலையாக கடலூர் வந்து போகிறேன் என்று சொல்லி தப்பித்து விடுகிறார்கள். புதுவை பதிவு வாகனங்கள் விபத்துக்களில் சிக்கும்போது, முகவரியை விசாரித்தால், பல நேரங்களில் போலியாக இருப்பதாக கடலூர் போலீஸôர் தெரிவிக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் இன்சூரன்ஸ் இழப்பீடு பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ÷இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறை என்று, வாட் வரிவிதிப்பு முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அதைப் புதுவை மாநிலம் மதிக்கவே இல்லை. பல பொருள்களுக்கு தனது இஷ்டப்படி மிகக் குறைந்த வரியை விதித்துக் கொண்டது.
இதனால் பயன் அடைவோர் பிற மாநில நுகர்வோரும், புதுவை மாநில வணிகர்களும் மட்டுமே. புதுவை அரசின் கஜானாவுக்கும் பயன் இல்லை. புதுவை மாநில அரசியல்வாதிகளுக்கு இதில் கிடைக்கும் ஆதாயமே இந்த வரிகுறைப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. விற்பனை வரி மற்றும் சாலைவரி குறைவு காரணமாக, புதுவை மாநிலத்துக்குச் செல்லும் தமிழக நுகர்வோர் எண்ணிக்கை, இந்த ஆண்டு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, கடலூர் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த வரி வித்தியாசம் காரணமாக, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ஏற்படும் இழப்பு ரூ.25 கோடிக்கு மேல் என்று, 5 ஆண்டுகளுக்குமுன் கணக்கிடப்பட்டது. இந்த ஆண்டு இழப்பு மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று, வணிகவரி மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.÷அ னைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வரிக் கொள்கை இருந்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும். இல்லையேல் தமிழகம் தொடர்ந்து வருவாய் இழப்பைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதுவை யில் பதிவு செய்யப்பட்டு, கடலூரில் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களை கடந்த சில நாள்களாகச் சோதனையிட்டதன் மூலம், ரூ.7 லட்சம் சாலை வரி வசூலிக்கப்பட்டு இருப்பதாக, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இத்துடன் விற்பனை வரியையும் சேர்த்து, அந்தத் தொகையை ஆண்டு முழுவதற்கும் 5 மாவட்டங்களுக்கும் பெருக்கிப் பார்க்கும் போது, தமிழகத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பு எத்தனை கோடி என்பதை தமிழக அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக