சிதம்பரம் :
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளது.கடலூர் மாவட்ட அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக்கழக கூட் டம் சிதம்பரத்தில் நடந்தது. நகர தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், சக்திவேல் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் சரவணன் வரவேற்றார். அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழக மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், மாநில நிர்வாகிகள் நடராஜன், குமார், பழனிவேல், முத்துக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், பொதுச் செயலாளர் சிவக்குமார் பேரவை உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டும், கரூரில் நடந்த தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. வரும் 2011ல் நடக்க இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக