உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

சூறாவளியிலிருந்து வாழையை காப்பாற்ற குச்சிகளுக்கு பதில் கயிறு கட்டும் பணி தீவிரம்

கடலூர் : 

           சூறாவளிக் காற்றில் இருந்து வாழையை காப் பாற்ற புதிய முறையில் கயிறு கட்டும் பணி நடந்து வருகிறது. கடலூர் ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், நெல்லிக்குப்பம், தொட்டி, பில்லாளி  உள்ளிட்ட பகுதிகளில் வாழை  பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. கோடை காலத்தில் திடீரென வீசும் சூறாவளிக் காற்றால் குலை தள்ளும் பருவத்தில் உள்ள வாழைகள் முழுவதும் ஒடிந்து நாசமாகி விவசாயிகளை நஷ்டமாக்கிவிடும். இதற்காக ஒவ்வொரு வாழைக்கும் காற்றில் சாயாதபடி சவுக்கு மரத்தால் முட்டுக் கொடுப்பது வழக்கம். இதற்காக வாழை விவசாயிகள் பெரும் தொகை செலவு செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு செய் வதால் இயற்கை சீற்றத்தில் இருந்து ஓரளவு வாழையை காப்பாற்றலாம். குச்சிகள் மூலம் முட்டுக்கொடுப்பதற்கு ஒரு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு ஆகிறது. தற்போது புதிய யுத்தியின் மூலம் நைலான் கயிற்றினால் வாழை மரத்தை அசையாமல் கட்டிவிட்டால் சூறாவளி காற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என விவசாயிகள் நம்புகின்றனர். இது சவுக்கு மரத்தை விட குறைந்த செலவில் செய்து விடுவதால் வாழை விவசாயிகள் கயிறு கட்டுவது சிறந்தது என கருதுகின்றனர்.

பொது அறிவிற்கு:

ப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் - ஹீவியா ப்ரசிலியன்சிஸ்


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior