உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

'கான்கிரீட்' வீடுகளுக்கு கூடுதல் தொகை: மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர் : 

           'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கும் தொகையை கூடுதலாக்க வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது. மா.கம்யூ., மாவட்ட செயற்குழு கூட்டம் முத்துவேல் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர்கள் தனசேகரன், மூசா உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
                 கடலூர் மாவட்டத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின் கீழ் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. கூட்டு மனைப்பட்டா உள்ளவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள், வறுமைக்கோடு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், புறம்போக்கில் வசித்தும் பட்டா கிடைக் காதவர்கள் இந்த திட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அரசின் விதிமுறைகளை தளர்த்தி, வறண்ட, நீர்நிலை, வாய்க்கால் புறம் போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கேட்டுக் கொள்கிறோம். வீடு கட்ட 60 ஆயிரம் ரூபாய் போதுமானதல்ல, தரமான 'கான்கிரீட்' கட்டடத்தை உத்தரவாதப்படுத்தும் வகையில் வீட் டிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior