சிதம்பரம்:
சிதம்பரம் அருகே மேலச்சாவடியில் இருந்து வடக்குச்சாவடி, நஞ்சை மகத்துவாழ்க்கை வழியாக சி.மானம்பாடி வரை சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த சாலை வழியாக பஸ் ஓடி பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. சிதம்பரத்தில் இருந்து சிதம்பரநாதன் பேட்டை, நக்கரவந்தன் குடி, கொடிப்பள்ளம், மேலச்சாவடி, அண்ணாபாலம், வடக்குச் சாவடி, நஞ்சைமகத்து வாழ்க்கை, நெடுஞ்சி, காரைக் காட்டுச்சாவடி வழியாக சி.மானம்பாடி வரை தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக் கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிதம்பரம் - சி.மானம்பாடி வரையில் உள்ள சாலை குண்டும் குழியுமாக ஆனதால் சிதம்பரத்தில் இருந்து காரைக்காட்டுச்சாவடி வழியாக சி.மானம்பாடி வரை சென்ற தனியார் பஸ் அடிக்கடி பழுதானது. இதனால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்பகுதி மக் கள் கோரிக்கையை தொடர்ந்து சிதம்பரத்தில் இருந்து சென்ற தனியார் பஸ் நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தோடு திரும் பியது. இதனால் நஞ்சைமகத்து வாழ்க்கையிலிருந்து சி.மானம் பாடி வரை உள்ள 3 கி.மீட்டர் தூரத்திற்கு பஸ் செல்ல முடியாத நிலையில் சாலை இருந்ததால் 10 ஆண்டுகளாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் சிதம்பரம் செல்ல 5 கி.மீ., தொலைவுக்கு மேல் நடந்து சென்று நஞ்சைமகத்து வாழ்க்கை அல்லது பொன் னந்திட்டு பகுதிக்கு சென்று பஸ் பிடிக்கும் அவல நிலை இருந்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க மேலச்சாவடியில் இருந்து நஞ்சைமகத்து வாழ்க்கை வரை சாலை சரியில்லாததாலும், வடக்குச்சாவடி பாலம் அருகில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாததாலும் இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் சாலை முழுவதும் இருபுறமும் முட்புதற்கள் மண்டி கிடப்பதால் பகலில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அப்பகுதி பொது மக்களின் நிலையை உணர்ந்து மேலச்சாவடியில் இருந்து காரைக்காட்டு சாவடி, (லாக்கு) வழியாக சி.மானம்பாடி வரை சாலையை சீர் செய்து மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக