நடுவீரப்பட்டு :
நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக்குறவர்கள் வீடு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் நரிக் குறவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவைகள் உள்ளது. தற்போது நடுவீரப்பட்டு பஸ் நிறுத்தத்திற்கு அருகில் உள்ளகைலாசநாதர் கோவிலுக்கு சொந்தமான புளியந்தோப்பில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் இலவச 'டிவி' வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் வீட்டிற்கு மின் வசதி இல்லாததால் அந்த 'டிவி'யை பெட்டிக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துள் ளனர். இவர்கள் வசிக்க நிரந்தர வீடு, இலவச மனை பட்டா கேட்டு பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நிரந்தரமாக வசிக்க இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின் றனர். 'டிவி' கொடுத்த தமிழக அரசு அதை வைத்து பார்க்க நிரந்தர வீடு, மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக