சிறுபாக்கம் :
சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் புதிய ரக எள் சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிறுபாக்கம் மற்றும் வேப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களான சேப்பாக்கம், நல்லூர், பெரியநெசலூர், காட்டுமயிலூர், கழுதூர், அடரி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரும்பு, மரவள்ளி அறுவடை செய்தனர். பின்னர் குறைவான நீரைக்கொண்டு புதிய ரக 'எள்' பயிரான திண்டிவனம் 4, திண்டிவனம் 2, வெள்ளை எள் ஆகியவற்றை பயிரிட்டனர். கடந்த ஆண்டு 80 கிலோ எள் மூட்டை ஒன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் மார்க்கெட்டில் அதிகபட்சமாக 5 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது விவசாயிகள் விதைத் துள்ள 'எள்' பயிர் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை மகசூல் கிடைக்கும். பூக்கள் பூத்துக் குலுங் கிய எள் பயிரால் நல்ல விலை கிடைக்குமென விவசாயிகள் மகிழ்ச் சியில் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக