கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 9 பள்ளிகளுக்கு, நிதி உதவியாக ரூ.3.1 கோடியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
இதற்கான விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது. 9 பள்ளிகளுக்கு ரூ.3.1 கோடியை வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:
திமுக ஆட்சியில் ஏராளமான பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 2009-10-ம் ஆண்டுக்கு ஆபத்தாரணபுரம், புலியூர் காட்டுசாகை, தீர்த்தனகரி, புதுக்கூரைப் பேட்டை, எறுமனூர், ஓட்டேரி, மோவூர், எடையார். திருமுட்டம் ஆகிய நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக் தரம் உயர்த்தப்பட்டன. இந்த 9 பள்ளிகளுக்கும் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தலா ரூ.58.25 லட்சம் வீதம் ரூ.5.24 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது.÷தற்போது 9 பள்ளிகளுக்கும் முதல் கட்டமாக, கட்டம் கட்ட தலா ரூ.30 லட்சம் மற்றும் பள்ளி வளர்ச்சி நிதியாக தலா ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி வழங்க, முதல்வர் கருணாநிதி ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். கிராமங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் வகையில், இந்த அரசு பள்ளிகளில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. கல்வி வளர்ச்சிக்காக அனைத்து வசதிகளைச் செய்து கொடுத்தும், கடலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளது.÷எனவே வரும் ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும், கல்வி அலுவலர்களும் இணைந்து மாணவ மாணவியருக்கு அடிப்படைக் கல்வியை சிறப்பாக வழங்கி, கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்கிக் காட்ட அனைத்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம். விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வித் திட்ட முன்மைக் கல்வி அலுவலர் மணவாள ராமானுஜம், ஒன்றியக் கல்விக் குழு உறுப்பினர் பொறியாளர் வி.சிவகுமார், மாவட்டக் கல்வி அலுவலர்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக