உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்டர்: கலெக்டர் தகவல்

கடலூர் : 

              மக்கள் குறைகேட்பு நாள் நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு  வழி அமைக்கப்பட்டு தனியாக மனுக்கள் பெறப்படும் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத் திற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன், பிற்பட்டோர் நல அலுவலர் கணபதி, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் தாட்கோ மூலம் கறவை மாடு வாங்கவும், மளிகைக் கடை வைக்கவும், 51 ஆயிரம் மானியத்துடன் 86 ஆயிரம் ரூபாய் கடனும், பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் 53  பேருக்கு தலா20 ஆயிரம் வீதம் 10.60 லட்சம் வழங்கப் பட்டது. மேலும் 3 பேருக்கு முதியோருக் கான உதவித் தொகை வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்துகொண்ட 4 பேருக்கு தலா 20 ஆயிரம் என 80 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது.

கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில் 

                 'மனு வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அடுத்த வாரம் முதல் குறைகேட்பு கூட்டத்தில் மனுக்கள் பெற கூடுதல் கவுண்டர் திறக்கப்படும். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர் திறக்கப்படும். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவி தொகையும், 20 பேருக்கு திருமண உதவி உள்பட 232 பேருக்கு 12.97 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 369 பேருக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,541 பேருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்க தயார் நிலையில்  உள்ளது' என தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior