உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

கொள்ளிடம் கரையில் வெள்ள தடுப்பு கரை அமைக்க ரூ.108 கோடி அனுமதி: கண்காணிப்பு பொறியாளர் தகவல்

திட்டக்குடி: 

                    திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணிக்கு கூடுதலாக 9.71 கோடி ரூபாய் நிதி பெறப்படும் என, கண்காணிப்பு பொறியாளர் கூறினார்.

                  வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைந்து வந்தன. இதில் வலுவிழந்த  800 மீட்டர் கரைப்பகுதியை சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பணிகள் துவங்கி நடந்து வந்தன.  கூடுதலாக நிதி தேவைப்படுவதால் கடந்த மூன்று வாரங்களாக பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இது குறித்து பாசன சங்க தலைவர்களிடையே அவசர கூட்டம் நடத்தப்பட்டு, பணிகளை விரைவில் துவங்கிட முதல்வரை நேரில் சந்திக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் மீண்டும் பணிகள் துவங்கியது.

வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் பணிகளை துவக்கி வைத்து கூறியதாவது: 

                  வெலிங்டன் நீர்த்தேக்க கரை சீரமைப்பு பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஜூன், ஜூலை மாதங்களுக்குள் பணிகளை முடித்திட தீர்மானித்துள்ளோம். கடந்த சில வாரங்களாக மழை, அக்னி வெயில், வாகன பராமரிப்பு, பணியாளர்களின் விடுப்பு காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பழைய வேகத்திலேயே பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் முடியும். வரும் பருவமழையில் தண்ணீரை வீணாக்காமல் முழுமையாக சேகரித்து விவசாயத்திற்கு வழங்கப்படும்.  கீழணைக்கு கீழிருந்து கொள்ளிடம் இடதுகரையில் வெள்ள தடுப்புக் கரை அமைத்திட 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 108 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நஞ்சன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior