உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை இல்லை


                   தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சேலத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.

                வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலம் வந்த அவர், அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடப் பணிகளைப் பார்வையிட்டார். பின்னர், அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர் இதய அறுவை சிகிச்சை வார்டுக்குச் சென்றார். அங்கு நோயாளிகள் கூட்டம் அதிகம் இருப்பதைக் கண்ட அமைச்சர், அவர்கள் ஏன் நிற்கிறார்கள் என்று கேட்டறிந்தார். நோயாளிகளை அதிக நேரம் காக்க வைக்கக் கூடாது என்று டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து மருந்து வழங்கும் கவுன்ட்டருக்குச் சென்ற அமைச்சர், அங்கு காலாவதி மருந்துகள் ஏதேனும் உள்ளதா என்று சோதனை செய்து, அங்கிருந்து சில மாத்திரைகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் கனகசபை, கண்காணிப்பாளர் மோகன் மற்றும் டாக்டர்களிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  அமைச்சர் கூறியது:

              சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவாகவும், திருப்திகரமாகவும் உள்ளது. கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடைந்து ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறக்கப்படும். தமிழக மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் உள்ளனர். புதிதாக சுமார் 6 ஆயிரம் டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த எந்தத் தடையும் இல்லை. மாணவர் சேர்க்கை நிச்சயம் நடைபெறும் என்றார் அவர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior