உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் விடுவிப்பு:மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொய்வு

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டதால் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

                          தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு, வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஜூன் முதல் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் 4,029 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் வரை அரசு அலவன்சாக வழங்குவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் இந்த பணியை தொடர உள்ளனர்.

                  இதற்கிடையே ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் இடமாற்றம், பதவிஉயர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அந்த டத்தில் இருந்து உடனடியாக மாற்றப் பட்டு புதிய இடத்தில் பதவியேற்றால் கணக்கெடுப்பு பணி பாதிக்கும் என்பதால் மாவட்டக் கல்வி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் 31.7.2010 அன்று பிற்பகல் பணியிலிருந்து விடுவித்தும், 2.8.2010 அன்று காலை பதவி உயர்வு பணியிடத்தில் பணியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவுக்குப் புறம்பாக நேற்று முன்தினம் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு, மாற்றல் உத்தரவு பெற்ற ஆசிரியர்கள் திடீரென விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆசிரியர்கள் பல மைல் தூரம் சென்று கணக்கெடுப்பு பணி செய்யவிருப்பதால் கணக்கெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior