கடலூர் :
இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு சமூகப்பணி உறுப்பினராக நியமிக்க சமூக பணியாளர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களுக்கு சமூகப்பணி உறுப்பினராக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த சமூக பணியாளர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பிரிவிலிருந்து ஒரு பெண் உட்பட உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்ப உள்ளனர். குழந்தைகள் தொடர் பாக உடல்நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தற்போது சமூகப் பணி உறுப்பினராக உள்ளவர்களும் 2வது பணிக் காலத் திற்காக விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாவர்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையி யல், கல்வி அரசியல், அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி, சட்டம் (அ) மருத்துவம் ஆகிய பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை இளைய தளத்திலிருந்து பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள்
நன்னடத்தை அலுவலர்,
சமூக பாதுகாப்புத்துறை,
கடலூர் மாவட்டம்,
அரசினர் கூர்நோக்கு இல்லம்,
கடற்கரை சாலை.
கடலூர்.
செல்: 9445354760.
இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக