சிதம்பரம் :
தமிழக அரசு இந்த கல்வியாண்டு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்ட புத்தகம் சிதம்பரத்தில் பள்ளி திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான பாடநூல்கள் மாவட்ட தலைநகரங்களில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதனை பெற்று வந்து பள்ளி திறந்த முதல் நாளில் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகரிலும் நேற்று புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டது. சமச்சீர் கல்வி திட்ட 6ம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகம் 9 இயல்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு இயல்களிலும் செய்யுள், உரைநடை, துணைப் பாடம் மற்றும் இலக்கணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உரை நடையில் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா., ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்த விதம் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக