உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

பிச்சாவரம் காட்டில் தீ விபத்து:தொழிலாளிக்கு 3 மாதம் சிறை

கிள்ளை : 

                    பிச்சாவரம் காட்டில் தீ பிடித்து எரிய காரணமாக இருந்த தொழிலாளிக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் அரிய வகை மூலிகை தாவரங்கள் மற்றும் மாங்குரோவ் காடுகள் உள்ளன. இச்சுற்றுலா மையத்தில் கடந்த ஜூலை 4ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆவாரம்பூ, நரிப்பூண்டுகள் எரிந்து சேதமடைந்தன.

                      மாவட்ட வன அலுவலர் துரைசாமி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ததில், நண்டு மற்றும் மீன் சுட்டதால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, எளிதில் தீப் பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடைவிதிக்கப் பட்ட பகுதியில் தீ மூட்டி மீன் மற்றும் நண்டுகளை சுட்ட கிள்ளையைச் சேர்ந்த தொழிலாளி சாமி என்கிற கலியமூர்த்தியை கைது செய்து சிதம்பரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுற்றுலா மையத்தில் தீ விபத்து ஏற்படுத்திய சாமி என்கிற கலியமூர்த்திக்கு மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும் 300 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior