உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

விருத்தாசலம் அரசு பள்ளிக்கு 2 தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் உத்தரவு குழப்பம் குறித்து விசாரணை

விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

                   கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இவர், கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி முதல், தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இதே பள்ளியில் 26 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன், இரண்டு ஆண்டுக்கு முன், உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். 10 மாதங்களுக்கு முன், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதலாகி சென்றார்.

                      இந்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து, விருத்தாசலம் பள்ளியில் பணிபுரிய தனக்கு மனமொத்த மாறுதலுக்கான ஆணை வந்திருப்பதாகக் கூறி, நேற்று காலை 10 மணிக்கு, பதிவேட்டில் கையெ ழுத்திட, முருகேசன் வந்தார். அப்போது, "இடமாறுதல் குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை' எனக் கூறிய தலைமை ஆசிரியர் பிரகாசம், வருகை பதிவேட்டை எடுத்து பூட்டி வைத்துவிட்டார். இதனால், பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து முருகேசன் கூறியதாவது:

                       மனமொத்த இடமாறுலில் செல்வதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டோம். அதன்படி எனக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து இட மாறுதலுக்கான உத்தரவு வந்துள்ளது. காலையில் நேரம் சரியில்லை என்பதால், பகல் 1.30 மணிக்கு மேல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு பணியில் அமர்வேன்.இவ்வாறு முருகேசன் கூறினார்.

தலைமை ஆசிரியர் பிரகாசம் கூறுகையில், 

           "மனமொத்த மாறுதலுக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. அதற்காக எந்த கையெழுத்தும் போடவில்லை. அப்படியே போட்டிருந்தால் அதை, முருகேசன் என்னை ஏமாற்றி வாங்கியிருக்கலாம். மேலும், இடமாறுதலுக்கான உத்தரவு இதுவரை எனக்கு வரவில்லை' என்றார். 

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி கூறுகையில், 

                   "மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடப்பதால், எந்த ஆசிரியருக்கும் பணி இடமாறுதல் வழங்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தலைமை ஆசிரியர் பிரகாசம் மனமொத்த இட மாறுதலுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. இப்பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior