உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் தகவல்

பண்ருட்டி : 

                கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.பண்ருட்டி பகுதி சாலை பணிகளை நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன் ஆய்வு செய்தார்.

பின்னர் நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் வெங்கடேசன் கூறியதாவது:

              கடலூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் 298 கி.மீ., மாநில முக்கிய நெடுஞ்சாலைகள் 395 கி.மீ., கிராம சாலைகள் 960 கி.மீ., கரும்பு அபிவிருத்தி சாலைகள் 244 கி.மீ., என மொத்தம் 1,899 கி.மீ., சாலைகள் உள்ளன. கடந்த ஆண்டு சாலை பணிகள் 27.5 கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது. கடலூர் - சித்தூர் சாலை பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் வரையிலான சாலையில் புதிய தார் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும். முதல் கட்டமாக இந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்து குண்டு, குழிகள் மூடப்படும். கெடிலம் ஆற்றில் பாதித்த பகுதிகள் சீரமைக்கவும், மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் புளிய மரக் கன்றுகள் சாலையோரம் நடுவதற்கு ஒவ்வொரு அலுவலகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் பாதுகாப்பாக வளரவும், சாலையோரம் உள்ள மரங்களில் ஒளி பிரதிபலிப்பான்கள் ஒட்டவும், வளைவுகள் உள்ளிட்ட பகுதியில் மித வேகத் தடை அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு வெங்கடேசன் கூறினார். உடன் உதவி கோட்ட பொறியாளர் சுந்தரி, உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior