கடலூர் :
"கார்பைட்' கற்கள் மூலம் மா, வாழையை பழுக்க வைத்து விற் பனை செய்யும் வியாபாரிகள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கடலூர் நகராட்சி கமிஷனர் குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு:
கடலூர் நகராட்சி பகுதியில் சில பழ வியாபாரிகள் வணிக நோக்கத்துடன் மாம்பழம் மற்றும் வாழைப் பழங்கள் இயற்கை முறையில் கனிவதை தவிர்த்து லாபம் ஈட்டும் நோக்கில் "கார்பைட்' கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைத்து அதனை விற்பனை செய்வது தெரிய வருகிறது. பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து சாப்பிடுவது உடல் நலத் திற்கு கேடு ஏற்படுத்தும். இது போன்ற தவறுகள் ஆய்வில் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பழ வியாபாரிகளிடம் இருந்து பழங்கள் பறிமுதல் செய்து, அவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1993ன் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். மேலும் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் சாம்பல் நிற பவுடர் படிந்தது போல் இருக்கும். பொது மக்கள் இதுபோன்ற பழங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு கமிஷனர் விடுத்த செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக