சிதம்பரம், :
தமிழகத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் செம்மொழி மாநாட்டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேலையில்லா தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழகத்தில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதன் மூலம் உலகத்தில் உள்ள அனை வருக் கும் தமிழகத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் நாட்டில் தமிழை முதன்மை பாடமாக கொண்டு படித்து கூடுதலாக பி.எட்., பட்டமும் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான பட்டாதாரிகள் வேலை இல்லாமல் 45 வயதை கடந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலை, உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்காமல் இடை நிலை ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தும் அவலம் தொடர்கிறது.
அத்துடன் தமிழில் பட்டம் பெற்றவர்கள் தலைமை ஆசிரியராக இருந்தாலும் அவரை தமிழாசிரியராக கருதி வேறு ஆசிரியரை நியமிக்காமல் விட்டு விடுகின்றனர். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் மொழி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவதால் சில இடங்களில் எதிர்ப்புகள் உருவாகி வருவதை அறிய முடிகிறது. உலக மக்களை தமிழ் நாட்டுப்பக்கம் திசை திருப்ப வைத்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப மாநாட்டில் அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக