உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

ஊராட்சிகளில் வீட்டுமனைப் பிரிவு விதிமுறைகள்: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி பெறுதலுக்கான விதிமுறைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                   தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டட விதிகள் 1997 பிரிவு 3 ன்படி, வீட்டு மனைப் பிரிவு அனுமதி, நகர ஊரமைப்புத் துறையில் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்ட பின்னர், கிராம ஊராட்சியில் அனுமதி பெறப்பட வேண்டும்.  கூட்டு உள்ளூர் திட்டப்பணி மற்றும் புறநகர் வளர்ச்சித் திட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், 5 ஏக்கர் பரப்பு வரை மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க, சம்பந்தப்பட்ட உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.  ஏனைய அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும், 5 ஏக்கர் பரப்பு வரை, சம்பந்தப்பட்ட மண்டல இயக்குநருக்கு மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப அனுமதி மற்றும்  ஊராட்சி அனுமதி இன்றி அமைக்கப்படும் மனைப் பிரிவுகளில் கட்டப்டும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட மாட்டாது.  அனுமதியின்றிக் கட்டடம் கட்டப்படும் மனைப் பிரிவுகளில் அடிப்படை வசதிகள் ஊராட்சிகள் மூலம் செய்துதர இயலாது. ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்படும் அரசுக் கட்டடங்கள் தவிர மற்ற எந்த பொதுக் கட்டடங்களையும், மற்றும் அடுக்குமாடிக் கட்டடங்களையும் கட்ட, நகர ஊரமைப்புத் திட்ட இணை இயக்குநர் அல்லது துணை இயக்குநரிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெற்று, பின்னர் ஊராட்சியில் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior