கடலூர், :
பொது மற்றும் தனியார் பங்கேற்பு முறையில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை மேம்படுத்த தொழில் நிறுவனங்கள், தனியாரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் மத்திய அரசு முதல் பங்குதாரராகவும், மாநில அரசு 2வது பங்குதாரராகவும், தொழில் நிறுவனங்கள், தனியார் 3வது பங்குதாரராகவும் அமைத்து செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு மத்திய அரசு 2.5 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2010-11ம் நிதியாண்டில் திருச்சி மண்டலத்திலுள்ள கீழ்க்காணும் 4 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன.
திருக்குவளை, ஆண்டிமடம், பெரம்பலூர், புள்ளம்பாடி ஐ.டி.ஐ.,க்கள் பொது நிறுவனங்களில் தனியாரின் பங்கினை வளர்க்கும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர், மேற்காணும் இணைய தளம் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று 30ம் தேதியன்றோ, அதற்கு முன்போ ஆணையர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆயத்தூர் சாலை, கிண்டி, சென்னை-32 என்ற முவகரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக