கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வியாழக்கிழமை ஒரே நாளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.மாநாட்டின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை காலை, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 22 அரங்குகளில் ஆய்வரங்கங்கள் தொடங்கின.
இதில் மாலை 6 மணி வரை பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட 259 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துப் பேசினர். இந்த ஆய்வரங்க அமர்வுகளுக்கு அஸ்கோ பர்ப்போலா, கிரிகோரி ஜேம்ஸ், தியோடர் பாஸ்கரன், மயில்சாமி அண்ணாதுரை, சிலம்பொலி செல்லப்பன், நீதியரசர் மோகன், கிறிஸ்டியானா முரு, ரவிக்குமார் எம்.எல்.ஏ., உல்ரிக் நிக்லாஸ், ஆ.சிவதாணுப்பிள்ளை, எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் தலைமையேற்று நடத்தினர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக