கிள்ளை :
உலக தமிழ்ச்செம் மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிச்சாவரத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலகப்புகழ் பெற்ற பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் அரிய வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. இந்த மூலிகைத் தாவரங்களின் காற்றை சுவாசிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து இயற்கையை ரசித்தும், மூலிகை காற்றில் இளைப்பாறியும் வருகின்றனர். பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த விடுமுறையின் போது இருமுறை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பயணிகள் கூட்டம் குறைந்தது. தற்போது உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக