உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

இலவசக் கல்வி திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் : 

              தமிழகத்திலுள்ள அரசு, உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
   
                       இலவச கல்வித் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் சிறப்புக் கட்டணம், திரும்பப்பெற இயலாத கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை அரசு நிர்ணயித்த அளவிலும் தேர்வுக் கட்டணங்கள் முழுமையாகவும் ஒப்பளிக்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல மாணவ மாணவியர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலும், குடும்பத் தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இலவசக் கல்வி திட்டத்தின் கீழ் படிப்புக் கட்டணம், தேர்வுக் கட்டணம் மற்றும் திரும்பப் பெற இயலாத இதர கட்டணங்கள் ஒப்பளிக்கப்படுகிறது. 

                   மேலும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் இதே நிபந்தனைகளுக்குட்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. அரசு மற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு பயிலவில்லை என்ற நிபந்தனைகளுக்குட் பட்டு இலவசக் கல்வி திட்டத்தின் ழ் சிறப்புக் கட்டணம், படிப்பு கட்டணம், தேர்வுக் கட்டணம் இதர திரும்ப பெற்றிடாத கட்டணங்கள் ஒப்பளிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior