உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாளத்தில் மரக்கிளை விழுந்ததுரயில் போக்குவரத்து பாதிப்பு

கடலூர் : 

                       விருத்தாசலம் அடுத்த பூவனூர் ரயில்வே ஸ்டேஷனில் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதி அரித்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து நேற்றிரவு 8.20 மணிக்கு ரயில் பாதையில் விழுந்தது. இது குறித்து ரயில்வே ஊழியர்கள், ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தனர். 

                         பூவனூர் ஸ்டேஷன் மாஸ்டர் மவுன்ட்பேட்டன், உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, விருத்தாசலம் வழியாக வரும் ரயில்களை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். பின், ரயில் பாதையில் கிடந்த மரக்கிளையை ரயில்வே ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு துறையினர் மூன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர். மரக்கிளை விழுந் ததால் சென்னையில் இருந்து செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் உளுந்தூர்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior