உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

தமிழகத்தில் இந்த ஆண்டில் ஐ.டி. துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை: சி.ஐ.ஐ. தலைவர் தகவல்

                  தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப (ஐ.டி.) துறையில் இந்த ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து ந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கூறியதாவது: 

                     தமிழகத்தில் ஆட்டோ மொபைல் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இருந்த பின்னடைவு நிலை மாறி, இப்போது மீண்டும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் துறையில் 10 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, தமிழகத்தில் இப்போது ஐ.டி. துறை சார்ந்த நிறுவனங்களில் பலருக்கு வேலை கிடைத்து வருகிறது. இந்த நிதி ஆண்டில் ஐ.டி. துறையில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மட்டும் நடப்பு நிதி ஆண்டில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஐ.டி. துறை மேலும் வளர்ச்சி பெறும் வகையில் புதிய முதலீடுகள் மற்றும் நிறுவனங்களைத் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் அதிக உற்பத்திக்கு...: தரமான உரம் உள்ளிட்ட இடுபொருள்கள், சிறந்த நவீனத் தொழில்நுட்பம் மற்றும் காலத்துக்கு ஏற்ற பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் விவசாயத் துறையில் அதிக உற்பத்தியை எட்ட முடியும். தமிழகத்தில் ரயில், சாலை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்க சிஐஐ முக்கிய பங்காற்றுகிறது. சூரிய சக்தி மூலம் மின்னுற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை- பெங்களூர் இடையே தொழில் பிரகாரம் (இண்டஸ்ட்ரியல் காரிடார்) அமைக்கும் திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் கோபாலகிருஷ்ணன் 

சிஐஐ தமிழ்நாடு பிரிவின் அவைத் தலைவர் நந்தினி கூறியதாவது:

                  தமிழகத்தில் உயிரி தொழில்நுட்ப (பயோ டெக்னாலஜி) துறை வளர்ச்சி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக சென்னையில், உயிரி தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவம் உள்ளிட்ட இதர துறைகள் வளர்ச்சி பெறவும் சாதகமான வாய்ப்புகள் உள்ளன.சென்னை தரமணியில் தமிழக அரசு சார்பில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் டைசல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் வளர்ச்சி குறித்து சிஐஐ ஆய்வு செய்து விரிவான அறிக்கையை அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கும்.  தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அந்தக் குழுக்களுக்கு சிஐஐ பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் நந்தினி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior