குறிஞ்சிப்பாடி :
சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள் என வடலூரில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். சுத்த சன்மார்க்க நிலைய வைர விழா, சமச்சீர் கல்வி தொடக்க விழா வடலூரில் அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் கலையரங்கில் நடந்தது. ஓ.பி.ஆர்., கல்வி நிறுவனங்களின் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். சுத்த சன்மார்க்க நிலைய துணைத்தலைவர் ஊரன் அடிகளார் தலைமை தாங்கினார். சி.இ.ஓ., அமுதவல்லி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமானுஜம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முதல் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலவச பாடநூல், நோட்டு புத்தகம், சீருடை, புத்தகப் பை வழங்கி சமச்சீர் கல்வியை தொடங்கி வைத்து பேசியதாவது:
சுத்த சன்மார்க்க நிலையத்தை ஓ.பி.ஆர்., தொடங்கி வள்ளலார் குருகுலம் பள்ளியை உருவாக்கி கடலூர் மாவட் டத்தில் உள்ள மாணவர் கள் நல்ல கல்வி பெற வாய்ப்பை உருவாக்கியுள்ளார். இக்கல்வி நிறுவனம் ஒரு பல்கலைக்கழகமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல் படுகிறார்கள். பல கல்வி நிறுவனங்களை புதிதாக உருவாக்கி ஓ.பி. ஆரின் எண்ணங்களை நிறைவு செய்யும் வகையில் தாளா ளர் செல்வராஜ் செயல்படுகிறார்.
முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவார்கள். ஆண்டுக்கு 100 மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டம் மூலம் கிராமப்புறத்தில் பல உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்ந்துள்ளது. மேலும் பட்டதாரி இல்லாத குடும்பத்தில் முதல் பட்டதாரி படிப்புக்கு அனைத் தும் இலவசமாக வழங்கி படிக்கும் வாய்ப்பை முதல்வர் உருவாக்கியுள்ளார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக