கடலூர் :
பள்ளி மாணவ, மாணவிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்கள் தோறும் அரசு பள்ளிகளை துவங்கினாலும், ஒவ்வொரு பெற்றோரும் தங் களது பிள்ளைகள் ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசையில் நகர பகுதிகளில் உள்ள நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலேயே சேர்த்து வருகின்றனர். இதன் காரணமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை ஆண்டுக் காண்டு அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 228 நர்சரி பள்ளிகள் மற்றும் 112 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் 20 முதல் 30 கி.மீ., தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகின்றனர். இந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக பெரும்பாலான பள்ளி நிர்வாகங்களே பஸ் மற்றும் வேன்களை இயக்கி வருகிறது. இதற்காக மாணவர்களிடம் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவைத் தவிர வாடகை வேன், ஆம்னி வேன் மற்றும் ஆட்டோக்களும் மாத கட்டண அடிப்படையில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று வருகின்றன. பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர் கள் வருவாயை மட்டுமே குறியாக கொண்டு அளவுக்கு அதிகமாக மாணவர்களை திணித்துக் கொண்டு அதிவேகமாக செல் கின்றனர். இதனால் மாணவர்கள் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதம் நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்திற்குள்ளானதில் ஏழு சிறுவர்கள் இறந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களை ஏற் றிச் செல்லும் வாகனங்களில் நிர் ணயிக்கப்பட்ட அளவிற்கு மட் டுமே ஏற்ற வேண்டும். அதிக வேகம் செல்லக்கூடாது. அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணியில் அமர்த்த வேண்டும். வாகனங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதற்கான தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும்.
அவசர உதவிக்கு தனி கதவு அமைக்க வேண்டும். டிரைவர்களின் கவனத்தை சிதற வைக்கும் வகையில் டேப்ரிக்கார்டர், வீடியோ போன்றவை இயக்கக் கூடாது. மொபைல் போன் பேசக்கூடாது. முதலுதவி மற் றும் தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இவை அனைத்தும் ஓரிரு மாதங்கள் பின்பற்றினர்.
பின்னர் வழக்கம் போல் அதிக மாணவர்களை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக செல்லத் துவங்கியதால் மீண்டும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. கடந்தாண்டு ஆகஸ்ட் 19ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் டிரைவர் இறந்தார். 17 மாணவர்கள் காயமடைந்தனர். நவம்பர் 2ம் தேதி தனியார் வேன் நெய்வேலி அருகே கவிழ்ந்ததில் 20 மாணவர்கள் படுகாயமடைந் தனர். அதே மாதம் 23ம் தேதி சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு அருகே குளத்தில் கவிழ்ந்ததில் ஒரு மாணவர் இறந்தார். 34 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கலெக்டரின் அதிரடி உத்தரவின் பேரில் வருவாய், போலீஸ் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பள்ளி வாகனங்களை அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில் 40க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை விதிமுறைகளை மீறி இயக்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கப்பட்டனர். அதேபோன்று மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் வாகனங்ளையும் சோதனை மேற் கொண்டு விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது குறைந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் துவங்கியுள்ள நிலையில் தனியார் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்ல துவங்கியுள்ளனர். இதனை தடுத்து நிறுத்திட கடந்தாண்டு மேற்கொண்டது போல் வாகனங்களை சோதனை செய்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் விலை மதிப்பற்ற பள்ளி சிறுவர்களின் உயிரை பாதுகாக்க முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக