கடலூர்:
வி ழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு போலீசார்ரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். அனைத்து போலீஸ் சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகப்படும் நபர்கள் தீவிர விசாரணைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்துப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜுகளும் போலீஸôரால் சோதனையிடப்பட்டன. அவற்றில் தங்கி இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாவட்டத்தில் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள், அவர்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள், கியூ பிரிவு போலீஸôரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் சோதனையிடப்பட்டன. நாட்டு வெடி தயாரிப்போரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் சந்திப்பில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஞாயிற்றுக்கிழமை தீவிர ஆய்வு செய்தனர். விழுப்புரத்தை அடுத்த சித்தணி கிராமத்தில் சனிக்கிழமை, தண்டவாளம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ரயில்வே போலீஸôர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி விருத்தாசலம் சந்திப்பில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்களை தீவிர ஆய்வு செய்தனர். மேலும் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸôர் ஈடுபட்டு வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக