உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

ரயில் மறியல் போராட்டம் பேச்சுவார்த்தையில் தோல்வி

கடலூர் : 

                         ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மா.கம்யூ., இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி அறிவிக்கப்பட்டது போல் இன்று ரயில் மறியல் நடக்கிறது. 

                       கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதையை விரைவில் நிறைவேற்றவும், அனைத்து விரைவு ரயில்களும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை மா.கம்யூ., சார்பில் கடலூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், மயிலாடுதுறை கூடுதல் டிவிஷனல் மேலாளர் சத்தியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

                       கூட்டத்தில் மத்திய அரசிடம் பேசியதில் ரயில் நிறுத்துவது குறித்து ரயில்வே போர்டு தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும் வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு அச்சிடப்படும் கால அட்டவணையில் தான் மாற்றம் செய்ய முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. லாரன்ஸ் ரோடு சுரங்கப்பாதை பணியை விரை வில் தொடங்கி முடிக்க ஆவண செய்யப்படும் என கலெக்டர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் மா.கம்யூ., வினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று மா.கம்யூ.,வினர் அறிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior