உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி வீட்டில் தகவல் சேகரிப்பு


           2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
 
                  கணக்கெடுக்கும் பணி கிண்டி ஆளுநர் மாளிகையில் தொடங்கியது. ஆளுநர் பர்னாலா தனது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை அளித்து, தகவல் சேகரிப்புப் படிவத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்புப் பணிகள் நடைபெற்றன.முதல்வர் கருணாநிதியின் வீட்டில் தகவல் சேகரிப்புப் பணி நடைபெற்ற போது, தனது வீட்டில் உள்ளவர்கள் குறித்த விவரங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். பின்னர், தமிழ்நாடு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதல் நாளில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும். இந்த பணிகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்புப் பணியாளர்கள் வரும்போது, தேவையான மற்றும் சரியான விவரங்களை அளித்து, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் கோபாலகிருஷ்ணன்.   முக்கியப் பிரமுகர்களின் வீடுகளில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாநில வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். சுந்தரதேவன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் தகவல்களைப் பதிவு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior