புதுச்சேரி:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் டாக்டர் சுப்பாராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது இக் கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டு முதல் இந்த இடங்கள் 116 ஆக உயர்த்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தும் நோக்கத்தில் இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி இக் கல்லூரியில் புதுச்சேரி பகுதி மாணவர்களுக்கான இடங்களும் 26-லிருந்து 31 ஆக உயருகிறது. புதுச்சேரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு எண்ணிக்கை 5-லிருந்து 9 ஆக உயருகிறது. புதுச்சேரி ஆதிதிராவிட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 4-லிருந்து 5 ஆக உயருகிறது. இதன் மூலம் புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி, ஆதிதிராவிட மாணவர்களுக்கு 15 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதமும் இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்போது கட்டப்பட்டு வரும் கட்டடங்களின் பணிகள் முடிந்து உள்கட்டமைப்பு வசதிகள் உருவான பிறகு சேர்க்கைக்கான இடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக