கடலூர் :
கடலூரில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் பூட்டியே கிடக்கிறது. கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரியும் இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர், 45 போலீஸ்காரர்களுக்கான வீடுகள், கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பின்னால் கட்டப் பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம் சார்பில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பிற்கு மின் இணைப்பு கொடுக்காமல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அலை கழித்து வருகின்றனர்.இதனால் இந்த குடியிருப்பு கட்டுமான பணியை கான்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்ததாரர் வீடுகளை போலீஸ் துறையில் ஒப்படைக்க முடியாமல் அல்லாடி வருகிறார். மேலும், பள்ளி திறப்பதற்கு முன்பாக குடியிருப்பில் தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய் யப்படும் என காத்திருந்த தேவனாம்பட்டினம் போலீசாரும் தற்போது என்ன செய்வது என புரியாமல் தவித்து வருகின்றனர்.அரசு கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுக்கவே கான்ட்ராக்டரை மூன்று மாதங்களுக்கு மேலாக அலைகழித்து வரும் மின்வாரிய ஊழியர்கள், பொதுமக்கள் மின் இணைப்பு கேட்டால் எப்படி நடத்துவார்கள் என்பதை நினைத்து பார்க்கவே வேதனையாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக