உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

பராமரிப்பில்லா கட்டடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை

நெய்வேலி:

                 நெய்வேலி வட்டம் 14-ல் செயல்படும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை போதிய இடவசதியில்லாத பராமரிப்பில்லாத கட்டடத்தில் இயங்கி வருகிறது. 

                    ஜவகர் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்  கட்டணம் செலுத்த வசதியாக கல்லூரியின் பரிந்துரையின் பேரில், கல்லூரி வளாகத்தின் கிழக்குப் புறத்தில் 600 சதுர அடி பரப்பளவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கூடுதல் கவுண்டர் 13 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டது.பின்னர் 2006-ம் ஆண்டு முதல் தனிக்கிளையாக செயல்படத் தொடங்கியது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூடுதல் வாடிக்கையாளர்கள் வந்துசெல்லும் அளவுக்கு வசதி செய்யப்படவில்லை.600 சதுர அடி பரப்பளவு உள்ள இவ் வங்கியில் ஒரேசமயத்தில் 10 வாடிக்கையாளர்கள் கூட வங்கியினுள் நிற்க முடியாத அளவுக்கு இடநெருக்கடி உள்ளது. இவ் வங்கி கிளையில் தற்போது மேலாளர், உதவி மேலாளர், காசாளர், 2 முதுநிலை ஊழியர்கள்,  உதவியாளர் என 6 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கென தனித்தனி மேஜை நாற்காலி, கோப்புகள் வைப்பதற்கான அலமாரி உள்ளிட்டவையும் போதுமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதால் வங்கி ஊழியர்கள் நடமாடக்கூட இடம் இல்லை. 

                     எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் வங்கியினுள் அமர்ந்து உணவருந்தக் கூட இடமில்லாமல் ஒருவர் உணவு சாப்பிட்டு முடித்தபின்னர் அவர் அவ்விடத்தை காலிசெய்த பின்னரே மற்றவர் அமர்ந்து சாப்பிட முடியும் என்ற நிலை உள்ளது.மேலும் வங்கி கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை உள்ளே வருவதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது. வங்கி கட்டடத்தை சீரமைப்பதோடு கூடுதல் இடவசதி ஏற்படுத்த வேண்டும் அல்லது இடவசதி மிக்க புதிய கட்டடத்துக்கு வங்கி கிளையை மாற்ற வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் கோரிக்கை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior