உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

பிச்சாவரம் சுற்றுலா மையம் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு! சுற்றுலா வளர்ச்சி கழகமே நடத்த வலியுறுத்தல்

சிதம்பரம் : 

                சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வன சுற்றுலா மைய ஓட்டல், விடுதிகள், பார்களை தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

                 சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது பிச்சாவரம் வன சுற்றுலா மையம். 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலக்காட்டில் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை எனும் மாங்குரோவ் தாவரங்கள், 18 வகையான மூலிகை தாவரங்கள் நிறைந்துள்ள இச்சுற்றுலா மையம் உலக அளவில் சிறப்பு பெற்று, கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது. இங்குள்ள 4 ஆயிரத் திற்கும் மேற்பட்ட கால் வாய்கள் ஒரே மாதிரியான அமைப்புடன் இருப்பது சிறப்பு.

                   இம்மையத்திற்கு வர சிதம்பரத்தில் இருந்து பஸ் வசதி, தமிழ்நாடு சுற்றுலா மையம் சார்பில் ஓட்டல், சதுப்பு நிலக்காடுகளுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் காட்டேஜ், சிறுவர்கள் விளையாட பூங்கா ஆகியன உள்ளது. கடலூர் கலெக்டராக இருந்த ககன்தீப்சிங்பேடி பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். கடந்த 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு மீண்டும் பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பயணிகளின் வரத்தை அதிகரிக்கும் பொருட்டு பல் வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

                  கிள்ளை பேரூராட்சி சார்பில் நகர்ப்புற சீரமைப்பு திட்டத்தில் கிள்ளை சேர்மன் ரவிச்சந்திரன் முயற்சியால் 50 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. உயர்கோபுரம், டெலஸ் கோப், சிறுவர் பூங்கா, புதிய படகுகள் வாங்கப் பட்டுள்ளன. பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தற்போதைய நிலையில் வளர்ச்சிக் கேற்ப பயணிகளின் வருகையும, வருமானமும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்ததன் மூலம் 32 லட்சம் ரூபாயும், 2008ல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பயணிகளினால் 60 லட்சமும், கடந்தாண்டு ஒரு லட்சத்து 51 ஆயிரம் பயணிகளினால் 95 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள் ளது. கோடை காலமான தற்போது மே மாதம் மட்டும் 18 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

               சுற்றுலா மையத்தின் வருமானம் ஆண்டுக் காண்டு உயர்ந்து வரும் நிலையில் சுற்றுலா மைய விடுதி, ஓட்டல்கள், பார் ஆகியவற்றை தனியாரிடம் ஆண்டுக்கு 10 லட் சத்து 80 ஆயிரத்திற்கு 15 ஆண்டு குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டித்தரும் பிச்சாவரம் சுற்றுலா மைய விடுதி, ஓட்டல்களை தனியாரிடம் ஒப்படைத்துள்ளதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட சிதம்பரம் சுற்றுலா விடுதி மற்றும் ஓட்டல் மூடப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல் சுற்றுலா வளர்ச்சி கழகமே தொடர்ந்து நடத்தினால் மேலும் வருமானம் அதிகரிக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும் என தமிழக முதல்வர் மற்றும் சுற்றுலாத்துறை செயலருக்கு கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மனு அனுப்பியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior