கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது. இதில் விவரங்களை அளிக்காமல் விடுபட்டவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு:
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. 2,10,814 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. 668 ஊராட்சிகளில் 1,90,262 கூரை வீடுகள் அலுவலர்களால் மேலாய்வு செய்யப்பட்டு உள்ளது. கணக்கெடுப்புப் படிவங்கள் சரிபார்க்கப்பட்டதும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு நடைபெற்றபோது, தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்களின் வீடுகள், பூட்டப்பட்டு இருந்ததாகக் கணக்கெடுப்புப் படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும்.
இத்தகைய நபர்கள் தங்கள் வீடுகள் பற்றிய விவரங்களை, ஆவணங்களை படிவத்தில் பதிவு செய்துகொள்ள, சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து விண்ணப்பிக்க, 30-6-2010 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக