நெய்வேலி :
புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவுப் பணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதையொட்டி பாதுகாப்புப் பணியில் ஆயிரம் போலீஸôர் ஈடுபடவுள்ளனர். என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த போதிலும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்நிலையில் புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்திடவும், ஊதியமாற்று ஒப்பந்தக் குழுவை மாற்றிட வலியுறுத்தியும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 2 முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி புதன்கிழமை மெயின் பஜாரில் நடைபெறும் வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டத்தில் முறைப்படி இதனை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் மே 31-ல் நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளன. இவர்கள் ஜூன் 15-க்குப் பிறகே வேலைநிறுத்தம் செய்யமுடியும் என்ற நிலையில், தொழிற்சங்கக் கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
இக்கடிதம் குறித்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கூறுகையில், "
"இக் கடிதத்தை நாங்கள் புறக்கணித்துள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எந்தத் தேதியிலிருந்து ஸ்டிரைக் செய்யப்போகிறார்கள் என்பதே தெரியாத பட்சத்தில் அவர்களுக்கு எப்படி ஆதரவு அளிக்கமுடியும்? எனவே நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி, புதன்கிழமை இரவுப் பணி முதல் ஸ்டிரைக் நடைபெறும்'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக