உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி தொடங்கிய முதல் நாளே மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

கடலூர்:

                   திட்டக்குடி அருகே கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை பள்ளி தொடங்கிய முதல் நாளே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

                   திட்டக்குடியை அடுத்த சிறுநெசலூரில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி உள்ளது. இதில் 120 மாணவர்கள் படிக்கிறார்கள்.÷2 ஆண்டுகளுக்கு முன் சிறுநெசலூர் வழியாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைத்தபோது, சிறுநெசலூர் கிராமம் சாலைக்கு கிழக்குப் பகுதியிலும், நடுநிலைப் பள்ளி சாலைக்கு மேற்குப் பகுதியிலுமாக அமைந்து விட்டது.  பள்ளியையும் கிராமத்தையும் இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதையும் அமைக்கப்படவில்லை.

                           இதனால் மாணவர்கள் வெகுதூரம் நடந்து சென்று, போக்குவரத்து நெரிசல் மிகுந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியை தாற்காலிகமாக சிறுநெசலூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்கு கிராமப் பகுதியில் புதிய கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளிக்கு புதிய  கட்டடம் கட்டாததைக் கண்டித்து சிறுநெசலூர் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை, தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். 120 மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெற்றோரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior