உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்ப்பலகை: கால அவகாசம் நீட்டிப்பு


கடலூர்:
 
                கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க கால அவகாசம் 5-6-2010 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 
மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு: 
 
                  கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கடலூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் கடைகளும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. இதுதொடர்பாக தொழிலாளர் துறை ஆய்வு செய்ததில் தமிழில் பெயர்ப் பலகை வைக்காத 221 நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
 
                  தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான காலஅவகாசம் 5-6-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது. எனவே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பறைசாற்றும் வகையில், அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழில் பெயர்ப்பலகை வைத்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழில் பெயர்ப் பலகை வைக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior