மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்குவதில் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டம் முதலிடத்தில் திகழ்கிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
கடலூர் அடுத்த குடிகாடு ஊராட்சி ராசாப்பேட்டை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு 3.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 131 வீடுகள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சுனாமி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜஸ்ரீ வரவேற்றார். கடலூர் சேர்மன் தங்கராசு முன்னிலை வகித்தார். துணை கலெக்டர் ராமசாமி (சுனாமி), மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், ஊராட்சி தலைவர் ஆனந்தன், கல் விக்குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் குடியிருப்புகளைத் திறந்து பயனாளிகளுக்கு சாவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:
இந்த கிராமத்தில் தடைபட் டுள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த விழாவில் மட்டுமின்றி தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக உதவிகள் வழங்கி முதல் இடத்தை பெற் றுள்ளது. 2009-10ம் ஆண்டில் மாற் றுத்திறனாளிகள் 29 ஆயிரத்து 347 பேருக்கு தேசிய அடையாள அட் டையும், 10 ஆயிரத்து 502 பேருக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட் டுள்ளது.ராஜிவ் காந்தி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 3,267 வீடுகளில் கிராமப்புறத்தில் 1,589, நகர் புறத்தில் 1,678 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 100.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,818 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.
விழாவில் 103 பேருக்கு பட்டா, 36 மாற்றுத்திறனாளிகளுக்கு திருப் பூர் தனியார் கம்பெனியில் வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணை மற்றும் மூன்று சக்கர எலக்ட்ரிக்கல் மோட்டார் வாகனம் மற்றும் உபகரணங்கள், கர்ப் பிணி பெண்களுக்கு பேறு காலம், திருமணம், முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக